உங்கள் மகள் ஜாதகப்படி ஏழாம் இடத்தில் ராகு இருப்பதால் மாப்பிள்ளை ஜாதகத்தில் அதேபோல் ஏழாம் இடத்தில் ராகு அல்லது கேது இருக்க வேண்டும். நீங்கள் வெறும் நட்சத்திர பொருத்தம் பார்த்து திருமணம் செய்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தங்கள் மகள் ஜாதகப்படிதான் பிரச்னைகள் உருவாகி உள்ளன. பொறுமையாக, மீண்டும் இல்லறத்தை நல்லறமாக மேற்கொள்ளவேண்டும் என்ற அக்கறையுடன் காத்திருந்தால் நன்மைகள் ஏற்படும்.
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.