துலாம் லக்னத்தில் பிறந்து பாக்ய ஸ்தானமான 9ம் இடத்தில் அதாவது, மிதுனத்தில் சுக்கிரன் இருக்கிறார். இதனால் நல்ல கூர்மையான அறிவுத் திறனோடும், அழகும், கலை ஆர்வம் மிக்கவராகவும், நடிப்புத் திறமை மிக்கவராகவும் விளங்குவார். ஆனால், திருமணப்பற்று இல்லாமல் இருக்கிறார். இருப்பினும் 2016ம் வருடத்திய குருப் பெயர்ச்சிக்கு பின்பு திருமணம் செய்து கொள்வார். வானத்தில் கருடன் பறக்கும்போது தரிசனம் செய்யச் சொல்லுங்கள். அப்படி இல்லையெனில் பெருமாள் கோயில் கருடாழ்வாரை வணங்கச் சொல்லுங்கள். கருடாழ்வாருக்கு வெண்ணெய் மற்றும் சிந்தூர காப்பு சாற்றி உளுந்து வடையை நிவேதனம் செய்து பக்தர்களுக்குக் கொடுக்க சொல்லுங்கள். ஏகாதசி அல்லது திருவோணம் நட்சத்திர நாளில் திருமால் கருட வாகனத்தில் உலா வரும்போது பலவித பழங்கள், முந்திரி, திராட்சை, கற்கண்டு, தாமரை மாலை, பன்னீர், சந்தனம் போன்றவற்றை கொடுக்கச் சொல்லுங்கள். திருமஞ்சனம் செய்யும்போது கலந்து கொள்ளச் சொல்லுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தை தினமும் 108 முறை கூறுங்கள்.
சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதா்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தரு
வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.