2016 பிப்ரவரி மாதத்தில் உங்கள் தந்தையே உங்களிடம் வந்து பேசுவார். தன் பேத்தியை அழைத்துப் போய் கொஞ்சுவார். கவலை வேண்டாம். சூரியனும் குருவும் இணைந்து உங்களுக்கு தெய்வ காரியங்களில் அதிகமான பற்றை ஏற்படுத்தி விடுவார்கள். நாகப்பட்டினத்தில் அருளும் நீலாயதாட்சி அம்மனை வணங்கி வாருங்கள். இங்கு ஈசனுக்கு காயாரோகணேஸ்வரர் என்று பெயர். இது ஆதிசேஷன் வழிபட்ட தலமும் கூட. கீழேயுள்ள துதியை தினமும் உங்கள் வீட்டு பூஜையறையிலேயே சொல்லியபடி இருங்கள்.
சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதா்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தரு
வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.