தங்கள் கடிதத்தில் நீங்களே எழுதி கேட்டுள்ள சந்திர காயத்ரி மந்திரத்தைச் சொன்னால் போதும். தினசரி காலை, மாலை இருவேளைகளிலும் சொல்லலாம். திங்கட்கிழமைகளில் 308 தடவை சொல்லவும்.
விரதமுறை: காலையில் குளித்து, சுவாமி படத்திற்கு முன் விளக்கேற்றி பிரார்த்தனை செய்து சந்திர காயத்ரி மந்திரம் சொல்லி பிரசாதமாக பால், பழம், கல்கண்டு, பேரீச்சம்பழம் வைத்து அந்த பிரசாதத்தை காலை உணவாக எடுத்துக்கொள்ளவும்.
மதியம் விரதம் இருக்கவும். மாலையில் சந்திர தரிசனம் செய்து அருகில் உள்ள கோயிலுக்கு சென் றுவிட்டு வந்து, பால் சாதம் (கல்கண்டு சேர்த்து செய்தது) பழம் இரண்டையும் இரவில் உட்கொள்ளவும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள சொக்கப்பநாயக்கன் தெருவில் இருக்கும் ரமண மந்திரம் சென்று பிரார்த்தனை செய்து வரவும். தினசரி காலை, மாலை தங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.