ஆறாம் பாவகத்தில் இணைந்துள்ள கிரகங்களின் சூழலே உங்களுக்கு இதுபோன்ற பிரச்னையைத் தந்திருக்கிறது. உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் உங்கள் பிரச்னைகள் முடிவிற்கு வரும் காலத்தை நெருங்கி விட்டீர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. தற்போது நடக்கவுள்ள குரு பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும் உங்கள் ராசிக்கு சாதகமான பலனையே தருகின்ற வகையில் அமைந்துள்ளதால் கவலைப்பட வேண்டாம். உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள நீங்கள் பணியில் இருந்த காலத்தில் அலட்சியத்தின் காரணமாக கவனிக்காமல் விட்ட ஒரு சிறு தவறின் காரணமாக இத்தனைகாலமாக சிரமத்தை அனுபவித்து வந்துள்ளீர்கள்.
தற்போது துவங்கியுள்ள ராகு தசையில் சுக்கிர புக்தியின் காலத்தில் உங்கள் பிரச்னைகள் முடிவிற்கு வந்துவிடும். நிலுவையில் உள்ள ஓய்வூதியத்துடன் சேர்த்து நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய தொகை மொத்தமாக வந்து சேரக் காண்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வலிமையுடன் அமர்ந்திருப்பதால் தற்போதைய தசாபுக்தியில் தனலாபம் காண்பீர்கள்.
உங்கள் ஜாதகத்தில் புதன் உச்சபலத்துடன் நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பதும் கூடுதலாக வலிமை சேர்க்கிறது. குடும்பத்தில் இழந்த பெருமையை மீட்பதுடன் அசையாச் சொத்து ஒன்று வந்து சேர்வதற்கான வாய்ப்பும் உண்டு. உங்களால் இயன்ற தொகையை பெருமாள் கோவில் உண்டியலில் சேர்ப்பதாக பிரார்த்தனை செய்து கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து வாருங்கள். வருகின்ற மார்ச் மாதம் 20 தேதிக்கு முன்னதாக பெருமாளின் அம்சமாக உங்கள் கண்களுக்குத் தோன்றும் ஒரு அதிகாரியின் மூலமாக உங்கள் பிரச்னை முடிவிற்கு வரக் காண்பீர்கள்.
குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.