நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் ஜென்ம லக்னத்திற்கும் ஜீவன ஸ்தானத்திற்கும் அதிபதி ஆகிய புதன் வக்கிரம் பெற்றிருப்பதால் நல்ல வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாவதை அறிய முடிகிறது. ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, கன்னியா லக்னத்திலேயே பிறந்துள்ளார். லக்னாதிபதி, ராசியாதிபதி, ஜீவன ஸ்தான அதிபதி என்று மூன்று பொறுப்புகளை சுமக்கும் புதன் உங்கள் மகனின் ஜாதகத்தில் செவ்வாயின் சாரம் பெற்று வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். மேலும் தற்போது ராகு தசை என்பது முடிவுறும் தருவாயில் உள்ளது. 14.04.2021 முதல் குரு தசை துவங்கினாலும் குரு கேதுவின் சாரம் பெற்றிருப்பதோடு எட்டாம் வீட்டில் வக்ர கதியில் அமர்ந்துள்ளார். இதனால் குரு தசையின் காலத்திலும் பெரிய மாறுதல்களைக் காண இயலாது. நல்ல சம்பளம், பெரிய வேலை என்ற கனவோடு காத்திருப்பதை விடுத்து தற்போது கிடைக்கும் வேலையை சிரத்தையோடு செய்து வரச் சொல்லுங்கள். குறைந்த சம்பளம் ஆக இருந்தாலும் அதிலும் குடித்தனம் செய்ய இயலும். அவரது ஜாதகத்தில் உள்ள பலவீனங்களைப் பெரிதாக எண்ணாமல் பலமாக உள்ளதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதுவே புத்திசாலித்தனமும் கூட.
ஜென்ம லக்னத்தில் புதன் வக்ரம் பெற்றாலும் உச்ச பலத்துடன் அமர்ந்துள்ளார். அதோடு லாபாதிபதி சந்திரன், தைரிய ஸ்தான அதிபதி செவ்வாய் ஆகியோரும் உடன் இணைந்துள்ளனர். கூடவே இருக்கும் கேது அவ்வப்போது சிறு சிறு மன சஞ்சலத்தைத் தந்து வந்தாலும் அதனைத் தாண்டி சாதிக்கும் திறனை மற்ற கிரகங்கள் வழங்குகிறார்கள். இவரது ஜாதக பலத்தின்படி பெரிய சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று காத்திருப்பதை விட சிறிய அளவிலான சம்பளமாக இருந்தாலும் பெயரளவில் ஒரு வேலையில் இருந்து கொண்டு சொந்தமாக தொழில் செய்ய முயற்சிப்பது நல்லது. அது பரம்பரையில்ஏற்கெனவே செய்து வந்த தொழிலாகக் கூட இருக்கும். மூலதனம் ஏதுமின்றி செய்யும் தொழிலாகவும் அமையும். தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள சுக்கிரன் நல்ல சம்பாத்தியத்தைத் தருவார். காலத்தை விரயம் செய்யாமல் உடனடியாக சுய தொழிலில் இறங்கச் சொல்லுங்கள். சம்பாத்தியத்திற்கும் குறைவு உண்டாகாது, கௌரவத்திற்கும் குறைவு உண்டாகாது.
மேலும் அவரது வயதினைக் கருத்தில் கொண்டு அதிக எதிர்பார்ப்பு ஏதுமின்றி உடனடியாக பெண் பார்த்து திருமணத்தை நடத்துங்கள். கால நேரத்தை தவற விட்டால் பின்பு திருமணம் நடப்பது என்பது கனவாகவே போய்விடும். தற்போதைய கிரக நிலையின்படி வருகின்ற சித்திரை, வைகாசி மாத வாக்கில் இவருக்கு திருமணம் முடிவாகிவிடும். சுய தொழிலில் சாதிக்க வேண்டும் என்பதையே இவரது ஜாதகம் வலியுறுத்திச் சொல்கிறது. தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை திருப்பி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்து முன்னேற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.