உங்களின் நீண்ட கடிதத்தை படித்தேன். அதை அப்படியே கேள்வியாக மாற்றுவதில் சங்கடம் இருந்தது. அதனால், அதைச் சுருக்கி கேள்வியாக மேலே கொடுத்திருக்கின்றேன். உங்களின் கடிதம் முழுக்க வெளிப்பட்டது தாழ்வு மனப்பான்மை மட்டுமே. அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் மிகத் தீவிரமான தாழ்வுணர்ச்சியில் இருக்கிறீர்கள். இன்னொன்று, ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் துணைவர் ஒவ்வொரு மாதிரி அமைவார்கள். ஒரு சிலருக்கு ஆளுமை மிக்கவர்களாகவும், வேறு சிலருக்கு ஆளுமை செய்பவர்களாகவும் அமைவார்கள். உங்கள் மனைவியின் ஜாதகத்தின் லக்னத்திலேயே செவ்வாய், சனி அமர்ந்திருக்கிறார்கள். சிம்ம லக்னம். சனி ஆறுக்கும், ஏழுக்கும் உடையவர். அவர் பாக்கியாதிபதியான செவ்வாயோடு லக்னத்தில் அமர்திருக்கிறார். செவ்வாயை ஆங்கிலத்தில் Ruler planet என்பார்கள். எனவே, ஆளுமைமிக்கவராக இருக்கத்தான் நிறைய வாய்ப்புகள் உண்டு. முடிந்தவரை இந்த இரு கிரகங்களும் தங்களை ஒருவரையொருவர் மிஞ்சத்தான் பார்க்கும். அதனால் விளைவது வெறும் ஈகோ பிரச்னை அவ்வளவுதான்.
சார், நான் வாழ்க்கை முழுக்க அடங்கித்தான் போகணுமா... என்றால், உங்கள் வாழ்க்கையில் உங்களின் இலக்கு என்ன என்று கேட்பேன். உங்கள் வாழ்வை, நீங்கள் அடைய வேண்டிய இலக்காக எதை வைத்திருக்கிறீர்கள். வீட்டிலுள்ள மனைவி உங்களை பாராட்டிவிட்டால் அல்லது இனி எப்போதும் உங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க ஆரம்பித்தால் நீங்கள் நிறைவடைந்து விடுவீர்களா? அதனால், கணவன் மனைவிக்கு அடங்கியிருப்பதும், மனைவி கணவனுக்கு அடங்கியிருப்பதும் என்பதில் பெரிய தீமை என்ன நிகழ்ந்து விடப் போகிறது, என்பதை நீங்கள் உணர வேண்டும். அதனால், பெரிய லட்சியம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
நீங்கள் வெளியில் புகழ்பெற வேண்டுமென்று ஆசைப்படுங்கள். குறைந்தபட்சம் உங்களின் மாவட்ட அளவிலாவது நீங்கள் ஏதேனும் செய்து உங்களை நிரூபிக்கப் பாருங்கள். வீட்டில் உள்ளோரிடம் புகழையும் அளவுக்கு அதிகமாக மரியாதையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் என்பது உங்கள் வீட்டிலுள்ள எல்லோரையும் சேர்த்துத்தான். அவர்கள் உங்களை புகழ்வதும், இகழ்வதும் என்பதும் உங்களுக்கு நீங்களே செய்வதும், சொல்லிக் கொள்வதுதான். எனவே, இதனால் பெரிதும் பாதிக்கப்படாதீர்கள். லட்சியம், செய்ய வேண்டிய காரியங்கள், உழைப்பு... என்று திட்டமிடுங்கள். நிறைய புத்தகங்களை வாசியுங்கள். நிறைய புத்தகங்கள் வாசிப்பவரோடு நட்பு கொள்ளுங்கள்.
உங்கள் ஜாதகத்திலும் லக்னத்திலேயே செவ்வாய், சுக்கிரன், கேது என்று கூட்டாக அமர்ந்திருக்கிறார்கள். அதனாலேயே நீங்களும் ஆளுமைத்திறனோடு இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். ஆனால், அந்த விஷயத்தை வீட்டில் வைத்துக் கொண்டால் சிக்கலாகும். ஓரிடத்தில் உங்களுக்கு மன உளைச்சல் அதிகமாக இருந்தால் தொடர்ந்து அந்த விஷயத்தை உங்களின் மனதின் ஆழங்களுக்கு கொண்டு சென்றபடியே இருக்காதீர்கள். நீங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் அது தொந்தரவை கொடுத்தபடி இருக்கும். உங்களின் ஜாதகத்தில் சூரியனும் புதனும் ஒன்றாக இருப்பதால் தலைமை தாங்கி ஒரு விஷயத்தை எடுத்துச் செல்லும் தன்மை இருக்கும். அதை வெளிப்படுத்துங்கள். உங்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் உடனடியாக வீட்டிற்குள் தெரியும். வெளியில் கொடி பறந்தால் வீட்டிற்குள் சொல்லவா வேண்டும். இம்மாதிரி விஷயங்கள் கொஞ்சம் வயதானாலே சரியாகப் போகும். உங்கள் லக்னத்தில் அமர்ந்துள்ள கேதுவை முன்னிட்டு சங்கட ஹர சதுர்த்தியன்று அருகிலுள்ள விநாயகர் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். கந்தர் அனுபூதி என்கிற புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு தினமும் பாராயணம் செய்யுங்கள். தெளிவும் ஞானமும் பெருகும்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.