கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நீங்கள் நண்பரின் நல்வாழ்விற்காக கடிதம் எழுதியுள்ளீர்கள். உங்கள் கருணை உள்ளத்திற்கு கர்த்தரின் ஆசிர்வாதம் என்றென்றும் நிலைத்திருக்கும். கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்நண்பரின் ஜாதகத்தில் தற்போது சூரியதசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் அத்தனை சிறப்பாக இல்லை. எனினும் அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் இடம் சுத்தமாக இருப்பதாலும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் நான்கில் அமர்ந்திருப்பதும் நல்லநிலையே.
உங்கள் நண்பருக்கு மறுமண வாழ்வு என்பது சிறப்பானதாக அமையும். தற்போது நேரம் சரியாக இல்லை என்பதால் அவர் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மருத்துவ சேவையில் அவரை முழுமனதோடு ஈடுபட்டு வரச் சொல்லி அறிவுறுத்துங்கள். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் சனியினால் உண்டாகும் பாதிப்பிலிருந்து விடுபட இயலும். ஞாயிறு தோறும் அருகிலுள்ள சிவன் கோவிலில் அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித் தரச் சொல்லுங்கள். 13.02.2019ற்குப் பின் அவரது மறுமணம் நடந்து நல்லபடியாக வாழ்வார்.
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.