1.1.2026 முதல் 31.12.2026 வரை
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
காரியத்தில் கண்ணாக செயல்படும் மேஷ ராசி அன்பர்களே,குரு பகவான் 1-6-2026 வரை உங்கள் ராசிக்கு 3ல் சஞ்சரிப்பதால் விடாமுயற்சி ஒன்றே வெற்றி தரும். 1-6-2026 க்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு 4ல் சஞ்சரிப்பதால் இதுவரை கனவாக இருந்த சொந்த வீடு வாங்கும் முயற்சிகள் நனவாகும். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை.வருடம் முழுவதும் சனிபகவான் 12ல் ஏழரைச் சனியாக சஞ்சரிப்பதால் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வீண் விரயங்கள் மருத்துவச் செலவினங்கள் வர வாய்ப்புள்ளதால் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. எதிலும் பொறுமை, நிதானம், விழிப்புணர்வு அவசியம். வீடு, வாகனம், விஷயங்களில் முதலீடு செய்வது நன்மை தரும். 5-12-2026 வரை ராகு கேது பகவான் முறையே 11,5ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் விடா முயற்சியால் வெற்றி பெறும்.குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது.ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.தேவையற்ற மன குழப்பத்தை தவிர்க்க யோகா மற்றும் தியானம் பயில்வது நன்மை தரும். புதிய வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்து வழிநடத்திச் செல்ல வேண்டியது உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். சில நேரங்களில் விரும்பத்தகாத இட மாற்றங்கள் வரலாம். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அன்றைய பாடங்களை அன்றன்றே படிப்பது அவசியம். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம்.
பரிகாரம்: சோளிங்கரில் உள்ள நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


