search-icon-img
featured-img

கடகம்

Published :

1.1.2026 முதல் 31.12.2026 வரை

(புனர்பூசம் 4ம்பாதம் பூசம்,ஆயில்யம்)

அன்பால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கடக ராசி அன்பர்களே,குரு பகவான் 1-6-2026 வரை உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள், சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம், எதிர்மறை சிந்தனை, உங்கள் ஆளுமைக்கு சவால்கள், தேவையற்ற வீண் விரயங்கள், மருத்துவச் செலவினங்கள் உண்டாகும். 1-6-2026க்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சரிப்பதால் கடந்த காலம் பற்றிய எதிர்மறை சிந்தனை, எதிர்காலம் பற்றிய பயம், மன அழுத்தம், குழப்பம், எதிலும் முடிவெடுக்க முடியாத சூழல்கள் வந்து நீங்கும். சனி பகவான் வருடம் முழுவதும் 9 ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள், பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். பிதுர் வழி சொத்து பிரச்னைகள் உருவாகும். எதிலும் உங்கள் தனித்திறமை வெளிப்படும்.ராகு கேது பகவான் முறையே 5-12-2026 வரை உங்கள் ராசிக்கு 8, 2ல் சஞ்சரிப்பதால் வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயத்தையும் நாசூக்காக கையாளுங்கள். பேச்சில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் வந்து நீங்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. வியாபார ரீதியான புதிய முயற்சிகள் கைகூடும். உங்கள் நிறுவனம் பிரபலம் அடையும்.உத்யோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும்.மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆசிரியர் உங்களை சரியாக வழி நடத்துவார். கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.