search-icon-img
featured-img

மகரம்

Published :

1.1.2026 முதல் 31.12.2026 வரை

(உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்)

உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்ந்து செயல்படும் மகர ராசி அன்பர்களே,குரு பகவான் 1-6-2026 வரை உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். நீண்ட நாட்களாக வங்கி கடனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். 1-6-2026 க்கு பிறகு இதுவரை இருந்த பிரச்னைகள் தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சனிபகவான் வருடம் முழுவதும் 3ல் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மக்களிடையே பிரபலம் அடைவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. பொருளாதார நிலை உயரும்.ராகு கேது பகவான் முறையே 5-12-2026 2, 8ல் சஞ்சரிப்பதால் பேச்சில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் வந்து நீங்கும். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரீதியான புதிய முயற்சிகள் கைகூடும். கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தேடி வரும். மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு முன்னேறுவார்கள்.

பரிகாரம்: ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் ராமானுஜரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.