1.1.2026 முதல் 31.12.2026 வரை
(மகம், பூரம், உத்திரம் 1 ம் பாதம்)
விடாமுயற்சியால் வெற்றிவாகை சூடும் சிம்மராசி அன்பர்களே, 1-6-2026 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் லட்சியங்கள் நிறைவேறும். எந்த சூழ்நிலையையும் நாசூக்காக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். 1-6-2026க்கு பிறகு குரு பகவான் 12ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள், மருத்துவச் செலவினங்கள் ஏற்படும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களை கவனமாக கையாளுங்கள்.வருடம் முழுவதும் சனி பகவான் 8ல் அஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் உருவாகும். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.ராகு கேது பகவான் முறையே 5-12-2026 வரை உங்கள் ராசிக்கு 7, 1ல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனைகள் உருவாகும். வாழ்க்கையில் வெறுப்பு விரக்தி வந்து நீங்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளை கவனமாக கையாளுங்கள்.உத்யோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்.மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். கலைத்துறையினர் எதிலும் காலதாமதத்தை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மரை ஞாயிற்றுக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


