search-icon-img
featured-img

துலாம்

Published :

1.1.2026 முதல் 31.12.2026 வரை

(சித்திரை 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2ம் பாதம்)

எந்த நிலையிலும் தன் நிலை மாறாத துலா ராசி அன்பர்களே, குரு பகவான்1-6-2026 வரை உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குரு மற்றும் மூத்தோரின் ஆசி கிடைக்கும். 1-6-2026 க்கு பிறகு 10ல் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சில நேரங்களில் உங்கள் தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படலாம். விரும்பத்தகாத இடம் மாற்றங்கள் உண்டு.சனி பகவான் வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். பொருளாதார நிலையில் மேன்மை அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். புகழ் செல்வாக்கு அந்தஸ்து உயரும். நீண்ட நாள் ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.ராகு கேது பகவான் முறையே 5-12-2026 வரை 5,11ல் சஞ்சரிப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை.ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். நீண்ட நாள் ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களுடைய நிறுவனம் பிரபலம் அடையும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தேடி வரும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த சாதனை படைப்பார்கள். கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளால் பிரபலம் அடைவார்கள்.

பரிகாரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமியை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.