search-icon-img
featured-img

மீனம்

Published :

1.1.2026 முதல் 31.12.2026 வரை

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மென்மையான குணமும், எப்போதும் மகிழ்ச்சியும் நிறைந்த மீன ராசி அன்பர்களே,குரு பகவான் 1-6-2026 வரை உங்கள் ராசிக்கு 4ல் அஷ்டம குருவாக சஞ்சரிப்பதால் தாய் உடல் நிலையில் பிரச்னைகள் உருவாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. குரு பகவான் 1-6-2026க்கு பிறகு உங்கள் ராசிக்கு 5ல் சஞ்சரிப்பதால் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை உயரும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.சனி பகவான் வருடம் முழுவதும் ஏழரைச் சனியில் ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனைகள் வந்து நீங்கும். யாரையும் நம்ப முடியாத சூழல் உருவாகும். எதிலும் முடிவெடுக்க திணறுவீர்கள். மனம் அமைதி பெற யோகா மற்றும் தியானம் நன்மை தரும். தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள்.ராகு, கேது பகவான் முறையே 5-12-2026 வரை ராசிக்கு 12, 6ல் சஞ்சரிப்பதால் வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எந்த சூழலையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.திடீர் பயணங்கள் உண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தேவையற்ற வீண்விரயங்கள். மருத்துவச் செலவினங்கள் உண்டு.வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். இருப்பினும் கவனம் தேவை. எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம்.உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும். இருப்பினும் பணிவுடன் செயல்பட வேண்டியது அவசியம்.மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தை சரியாக கவனித்துக் கொள்வது அவசியம். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் சாத்தியமாகும்.

பரிகாரம்: திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.