search-icon-img
featured-img

தனுசு

Published :

1.1.2026 முதல் 31.12.2026 வரை

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

தனக்கென ஒரு குறிக்கோளை நிர்ணயித்து வெற்றி பெறும் தனுசு ராசி அன்பர்களே,குரு பகவான் 1-6-2026 வரை உங்கள் ராசிக்கு 7ல் சஞ்சரித்து உங்கள் ராசியை பார்ப்பதால் எல்லா வகையிலும் நல்ல மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனையில் தெளிவு ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 1-6-2026க்கு பிறகு குரு பகவான் 8ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை.சனி பகவான் வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 4ல் அஷ்டம சனியாக சஞ்சரிப்பதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. தாயுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் உருவாகும். மன அமைதி குறையும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.ராகு கேது பகவான் முறையே 5-12-2026 வரை உங்கள் ராசிக்கு 3, 9ல் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். தங்க நகை ஆபரணச் சேர்க்கை உண்டு. பிதுர்வழி சொத்து பிரச்னைகள் உருவாகும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.

பரிகாரம்: குருவாயூரில் உள்ள குருவாயூரப்பனை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.