1.1.2026 முதல் 31.12.2026 வரை
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
ஆழ்ந்த அறிவும் ஆராய்ச்சி திறனும் உடைய விருச்சிக ராசி அன்பர்களே,குரு பகவான் 1-6-2026 வரை உங்கள் ராசிக்கு 8ல் அஷ்டம குருவாக சஞ்சரிப்பதால் எதிலும் நிதானம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயத்தையும் நாசூக்காக கையாளுங்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை. 1-6-2026க்கு பிறகு குரு பகவான் 9 ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தந்தையால் அனுகூலமான பலன்கள் உண்டு. வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு.சனி பகவான் வருடம் முழுவதும் 5ல் சஞ்சரிப்பதால் குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்ல வேண்டியது அவசியம். சிந்தனையில் தடுமாற்றம் உருவாகும். எதிலும் முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். மனக்குழப்பம் அதிகரிக்கும். யோகா, தியானம் பயிற்சி செய்வது நன்மை தரும்.ராகு கேது பகவான் முறையே 5-12-2026 வரை 4,10 ல் சஞ்சரிப்பதால் உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் உருவாகும். தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. சில நேரங்களில் உங்கள் தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படலாம். விரும்பத்தகாத இடம் மாற்றங்கள் வந்து நீங்கும். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. லாபம் அதிகரிக்கும்.மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். இருப்பினும் வளர்ச்சி உண்டு.
பரிகாரம்: தருமபுரி அருகே அதியமான் கோட்டையில் உள்ள காலபைரவரை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


