1.1.2026 முதல் 31.12.2026 வரை
(கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம்)
பொறுமையே பெருமை தரும் என்பதை உணர்ந்து செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே, குரு பகவான் 1-6-2026 வரை உங்கள் ராசிக்கு 2 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார நிலையில் முன்னேற்றம், உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வாழ்வில் எல்லா வகையிலும் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். குரு பகவான் 1-6-2026 க்கு பிறகு 3 ல் சஞ்சரிப்பதால் சகோதர சகோதரிகளிடையே மனக்கசப்புகள் வந்து நீங்கும். எதிர்காலம் பற்றிய சுய சந்தேகம் வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். வருடம் முழுவதும் சனி பகவான் 11 ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். விஐபிகளின் நட்பு கிடைக்கும். மக்களிடையே பிரபலம் அடைவீர்கள். ராகு கேது பகவான் முறையே 5-12-2026 வரை உங்கள் ராசிக்கு 10,4 ல் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும். மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும். உங்கள் தனித்திறன் வெளிப்படும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். தாய் உடல் நலனில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் உருவாகும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் முயற்சிகள் கை கூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள். கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுவார்கள்.
பரிகாரம்: திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாளை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


