search-icon-img
featured-img

கன்னி

Published :

1.1.2026 முதல் 31.12.2026 வரை

(உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, 3ம் பாதம்)

சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை எளிதில் மாற்றிக் கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே,குரு பகவான்1-6-2026 வரை உங்கள் ராசிக்கு 10ல் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. சில நேரங்களில் உங்கள் தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படலாம். விரும்பத்தகாத இடம் மாற்றங்கள் உண்டாகலாம். புத்தியை ஸ்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். 1-6-2026க்கு பிறகு குரு பகவான் 11ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். வருடம் முழுவதும் சனி பகவான் 7ல் கண்டகசனியாக சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்மறை சிந்தனைகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. உறவுகள் மற்றும் நண்பர்களை முழுமையாக நம்ப வேண்டாம். எந்த விஷயத்தையும் நாசூக்காக கையாளுங்கள். பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.ராகு கேது பகவான் முறையே 5-12-2026 வரை உங்கள் ராசிக்கு 6,12ல் வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும்.ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீண்ட நாளாக செல்ல வேண்டும் என்று இருந்த ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கூடும்.

பரிகாரம்: சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள சிங்கப்பெருமாளை புதன்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.