search-icon-img
featured-img

கும்பம்

Published :

15-5-26 முதல் 14-6-26 வரை

உற்ற நேரத்தில் உதவும் கும்ப ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு யோகாதிபதியாகிய சுக்கிர பகவான் 5ல் சஞ்சரிப்பதால் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் தெய்வ அனுகூலம் என்றும் உங்களை காத்து நிற்கும். இருப்பினும் சனி 2ல் இருப்பதால் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. செவ்வாய் 3ல் இருப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. சுக்கிரன் 5ல் இருப்பதால் தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும்.கேது 7ல் இருப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். வாழ்வில் தடைகள் இருந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சமூக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் உங்கள் பணிகளில் கவனமாக இருங்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத பண வரவு உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

சந்திராஷ்டம நாட்கள்: மே 25, 26, 27.

பரிகாரம்: ஆரணி ஏரி குப்பத்தில் உள்ள எந்திர சனீஸ்வரரை சனிக்கிழமை சென்று வழிபடுவதால் பிரச்னைகள் தடைகள் குறைந்து வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.