search-icon-img
featured-img

மேஷம்

Published :

18-8-26 முதல் 17-9-26 வரை

வாழ்வில் உயர்ந்த நோக்கம் உடைய மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 3ல் இருப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். சகோதர வழியில் மனக்கசப்பு உண்டு. குடும்பத்தில் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள். தங்க நகை ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். பயணங்களில் கவனம் தேவை. குரு 4ல் இருப்பதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்களை கவனமாக கையாளுங்கள்.சூரியன் மற்றும் கேது 5ல் இருப்பதால் குழந்தைகளுக்கு மருத்துவ செலவினங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமாக கையாளுங்கள்.எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் ஏற்படும். சுக்ரன் 6ல் இருப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. புதிய வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும்.ஏழரை சனியில் விரைய சனி நடப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 20, 21, 22.

பரிகாரம்: சிறுவாபுரி முருகப்பெருமானை செவ்வாய் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.