15-6-26 முதல் 16-7-26 வரை
அன்பே நிலையானது என்பதை உணர்ந்து செயல்படும் கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு யோகாதிபதியான செவ்வாய் பகவான் 10ல் இருப்பதால் எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் மற்றவர்களுக்காக தலையிட வேண்டாம். எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிர்காலம் பற்றிய பயம் கவலையை தவிர்க்கவும். 2ல் கேது இருப்பதால் குடும்ப விஷயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தங்க நகை ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். குழந்தைகள் செயல்பாடுகள் பெருமைப்பட கூடியதாக இருக்கும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் உண்டு. தெய்வ அனுகூலமும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. புதிய வியாபார. முயற்சிகள் கைகூடும். 8ல் ராகு இருப்பதால் எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாளுங்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை. யாரிடமும் வம்புச்சண்டை வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 4, 5, 6.
பரிகாரம்: ஆம்பூர் காட்டுவீர ஆஞ்சநேயரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


