15-5-26 முதல் 14-6-26 வரை
உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்ந்து செயல்படும் மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு யோகாதிபதியாகிய புதன் பகவான் 5ல் சஞ்சரிப்பதால் உற்ற நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். இருப்பினும் சனி 3ல் இருப்பதால் மேலும் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் கூடும். தங்க நகை ஆபரணச் சேர்க்கை உண்டு. உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புது வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் வர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. தந்தையால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. கேது 8ல் இருப்பதால் தொழில், உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் பணிகளில் சிரத்தையுடன் செயல்படுங்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: மே 23, 24, 25.
பரிகாரம்: விழுப்புரம் அருகே உள்ள சிங்கிரிகுடி, பூவரசன் குப்பம், பரிக்கல் நரசிம்மரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவதால் தடைகள் பிரச்னைகள் குறைந்து வாழ்வு சுபிட்சம் பெறும்.


