18-8-26 முதல் 17-9-26 வரை
எந்த சூழ்நிலையிலும் புத்தியை ஸ்திரமாக வைத்து செயல்படும் துலா ராசி அன்பர்களே, உங்கள் யோகாதிபதி புதன் பகவான் 10ல் சஞ்சரிப்பதால் எதையும் சாதிக்கும் ஆற்றல் உருவாகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும் உங்கள் ஆளுமை திறனுக்கு சவால்கள் ஏற்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. புதிய வீடு வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. சனி 6ல் இருப்பதால் எதிரிகள் விலகி செல்வார்கள். கடன் பிரச்னை தீரும். வழக்கு விஷயங்கள் சாதகமாகும். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை. தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதன் 11ல் இருப்பதால் தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குரு 10ல் இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு விரும்பத் தகாத இடம் மாற்றம் ஏற்படும். சில நேரங்களில் தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படுவீர்கள். பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 3, 4, 5.
பரிகாரம்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


