15-6-26 முதல் 16-7-26 வரை
பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 6ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்கள் அறிவுத்திறன் மேம்படும்.எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரநிலை உங்கள் தேவைக்கு ஏற்ப உயரும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் தற்போது உங்கள் கை வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் வெற்றி உண்டு.4ல் ராகு இருப்பதால் தாய் உடல்நலனில் கவனம் தேவை.உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனத்தை சீர்படுத்த செலவினங்கள் அதிகரிக்கும். 5ல் சனி இருப்பதால் குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். 9 ல் சுக்ரன் இருப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். எதிரிகள் இருந்தாலும் எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலும் உங்களிடம் உண்டு. குரு 9ல் இருப்பதால் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். உயரதிகாரிகள் சக ஊழியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நீண்டநாளாக வரவேண்டிய பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். உங்கள் திறமையினால் மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் அந்தஸ்து செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 15, 16, 17. ஜூலை 12, 13, 14.
பரிகாரம்: கதிராமங்கலம் வனதுர்க்கையை செவ்வாய்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


