search-icon-img
featured-img

கன்னி

Published :

15-5-26 முதல் 14-6-26 வரை

எதிலும் பொறுமையாக சிந்தித்து செயல்படும் கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் இனிய பேச்சால் மற்றவர்களை வசிகரிப்பீர்கள். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். தங்க நகை ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். பயணங்களில் கவனம் தேவை. தாயால் அனுகூலமான பலன்கள் உண்டு. உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். சனி 7ல் இருப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னையை தவிர்க்கலாம். தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குரு மற்றும் மூத்தோரின் ஆசி கிடைக்கும். தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்

சந்திராஷ்டம நாட்கள்: மே 15, 16, 17. ஜூன் 12, 13, 14.

பரிகாரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தரை வழிபடுவதால் பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.