search-icon-img
featured-img

கும்பம்

Published :

(அவிட்டம் 3,4 ம் பாதம், சதயம்,பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்)

உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே, சனிபகவான் உங்கள் ராசிக்கு 2ல் சஞ்சரிப்பதால் பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் வந்து நீங்கும். சிக்கனம் மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். 26-5-2026 க்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிரிகளை கவனமாக கையாளுங்கள். வங்கிக் கடனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு தற்போது வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ராகு கேது பகவானின் சஞ்சாரத்தால் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிலும் முடிவெடுக்க முடியாத சூழல் உருவாகும். தாய் உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கவனமாக கையாளுங்கள் உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கான முயற்சிகள் கைக்கூடும். பணிச்சுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள்.கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விகிதத்தில் கவனம் தேவை

பரிகாரம்: நாமக்கல்லில் உள்ள நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.