(அஸ்வினி,பரணி,கார்த்திகை 1ம் பாதம்)
தைரியமும் தன்னம்பிக்கையும் மிகுந்த மேஷ ராசி அன்பர்களே, தற்போது உங்கள் ராசிக்கு 12 ல் சனிபகவான் ஏழரைச் சனியில் விரைய சனியாக சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். உறவினர் மற்றும் நண்பர்களால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் அவர்களை கவனமாக கையாள்வது நல்லது. தேவையற்ற வீண் விரயங்கள் மற்றும் மருத்துவச் செலவினங்கள் வர வாய்ப்புள்ளதால் சிக்கனம் மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வீடு மனை வாகனம் சொத்து போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது. எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். 26-5-2026 க்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு 4 ல் அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிப்பதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்களை கவனமாக கையாள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகள் பிரச்னைகள் வந்து சரியாகும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.5-12-2026 வரை ராகு கேது பகவான் முறையே உங்கள் ராசிக்கு 11, 5ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. புதிய வியாபாரம் முயற்சிகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். எந்த விஷயத்தையும் நாசூக்காக கையாளுங்கள்.மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. யோகா மற்றும் தியானம் பயில்வது மன அமைதியும் நினைவாற்றலையும் அதிகரிக்கும். தேவையற்ற நட்பிலிருந்து விலகி இருங்கள்.கலைத்துறையினருக்கு தற்போது உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: திருத்தணி முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


