(புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)
அன்பால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கடக ராசி அன்பர்களே, சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் நீங்கும், எல்லா வகையிலும் நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விலகி சென்ற உறவுகள் விரும்பி வருவார்கள். 26-5-2026க்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சரிப்பதால் மன குழப்பம் அதிகரிக்கும். எதிலும் முடிவெடுக்க தயங்கக்கூடிய சூழல் உருவாகும். எதிர்காலம் பற்றிய பயம், சந்தேகம் வந்து நீங்கும். கடந்த காலம் பற்றிய தவறுகளால் மனம் வருத்தம் அடையக்கூடிய சூழல் உருவாகும். ஆனால் கடந்த கால தவறுகளில் இருந்து படிப்பினையை பெறுவீர்கள். அது உங்களின் எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும். எதிலும் நிதானம் விழிப்புணர்வு அவசியம். எதிர்மறை சிந்தனை விடுத்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.ராகு கேது பகவானின் சஞ்சாரத்தால் எடுக்கும் முயற்சியில் தடை தாமதம் ஏற்படும். வீண் வம்பு வழக்குகள் வர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டியது அவசியம். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் கவனம் தேவை. கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கவனமாக கையாளுங்கள். இருப்பினும் இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கும்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களால் இருந்த பிரச்னைகள் நீங்கும். உங்கள் உயர் அதிகாரி மாற்றப்படக்கூடிய சூழல் உருவாகும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் நீங்கும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.கலைத்துறையினருக்கு தடைபட்ட வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயர்ந்து பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை திங்கட்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


