(உத்திராடம் 2,3,4 ம் பாதம், திருவோணம், அவிட்டம்1,2 ம் பாதம்)
எப்பொழுதும் உயர்ந்த லட்சியங்களை கொண்ட மகர ராசி அன்பர்களே , சனிபகவான் உங்கள் ராசிக்கு 3ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. உடன்பிறப்புகளால் மன கசப்புகள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. 26-5-2026 க்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் குழந்தை பாக்கியம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.ராகு கேது பகவானின் சஞ்சாரத்தால் பேச்சில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருங்கள். புதிய தொழில் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய வியாபாரம் முயற்சிகள் கைகூடும். கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தேடி வரும். உங்கள் தனி திறன் வெளிப்படும்.மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்த சாதனை படைப்பீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியரால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதன் மூலம் பிரபலம் அடைவீர்கள். சம்பள விகிதம் உயரும்.
பரிகாரம்: திருநள்ளாரில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் சனி பகவானை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


