search-icon-img
featured-img

மிதுனம்

Published :

(மிருகசீரிடம் 3, 4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்)

எந்த சூழ்நிலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே, சனிபகவான் உங்கள் ராசிக்கு 10ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிலும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டியது அவசியம். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தரும். பொறுப்புகள் அதிகரிக்கும். 26-5-2026க்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு 2ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த மனக்குழப்பம் டென்ஷன் நீங்கும். தெளிவு பெறுவீர்கள். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வராத பணம் தற்போது வந்து சேரும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நடந்தேறும். ராகு கேது பகவானின் சஞ்சாரத்தால் தந்தை உடல் நலனில் கவனம் தேவை. பிதுர் வழி சொத்து பிரச்னைகள் உருவாகும். வெளிநாட்டு பணிகள் தொடர்பான ஆதாயம் உண்டு. மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். தங்க நகை ஆபரணச் சேர்க்கை உண்டு. சகோதரர்களால் மனக்கசப்புகள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களால் ஆதாயம் உண்டு.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள். கலைத்துறையினருக்கு தற்போது உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

பரிகாரம்: திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.