(சித்திரை 3, 4 ம் பாதம், சுவாதி,விசாகம் 1, 2, 3 ம் பாதம்)
வாழ்க்கை என்பது இன்பமயமானது என்பதை உணர்ந்து செயல்படும் துலா ராசி அன்பர்களே, சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி கிடைக்கும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. ஆளுமைத்திறன் அதிகரிக்கும். மக்களிடையே பிரபலம் அடைவீர்கள். 26-5-2026 க்கு பிறகு குரு பகவான் உங்கள் 10ல் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது சில நேரங்களில் உங்கள் தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நீங்கள் நிர்ப்பந்திக்கப்படலாம். அவசரப்படாமல் பொறுமை நிதானம் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். சிலருக்கு விரும்பத்த தகாத இட மாற்றங்கள் உண்டு.ராகு கேது பகவானின் சஞ்சாரத்தால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகள் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். நீண்ட நாள் ஆசைகள் லட்சியங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் முயற்சிகள் கைக்கூடும். மக்களிடையே உங்கள் நிறுவனம் பிரபலம் அடையும். மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஆதரவு கிடைக்கும். நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு உங்களுடைய தற்போதைய வாய்ப்புகளால் பிரபலம் அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமியை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


