(பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
எந்த சூழ்நிலையையும் எளிதாக கையாளும் மீனராசி அன்பர்களே, சனிபகவான் உங்கள் ராசியிலேயே ஜென்மச் சனியாக சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள். கடந்த காலத்தில் நடந்த எதிர்மறையான நிகழ்வுகளைப் பற்றி எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நேர்மறை சிந்தனைகளையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். யோகா தியானம் பயில்வது அவசியம். 26-5-2026 க்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ல் சஞ்சரிப்பதால் தாய் உடல்நிலை சீராகும். தாயுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தெய்வ அனுகூலம் உண்டு.ராகு கேது பகவானின் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் விலகி செல்வார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். நீண்ட நாளாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய வியாபாரம் முயற்சிகள் கைக்கூடும். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கவனமாக கையாளுங்கள்.உத்யோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயத்தையும் நன்கு ஆலோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். அறிவுத்திறன் வெளிப்படும். தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள். கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


