(மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)
அறிவும், அன்பை விட ஒழுக்கமே உயர்ந்தது என்பதை உணர்ந்து செயல்படும் தனுசு ராசி அன்பர்களே, சனிபகவான் உங்கள் ராசிக்கு 4 ல் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிப்பதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்களை கவனமாக கையாளுங்கள்.வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது அவசியம். காரிய தடைகள் வந்து நீங்கும்.26-5-2026 க்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு 8ல் அஷ்டம குருவாக சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். ராகு கேது பகவானின் சஞ்சாரத்தால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும், எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. தந்தை உடல் நலனில் கவனம் தேவை. சொத்து பிரச்னைகள் உருவாகும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கவனமாக கையாளுங்கள்.உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தாமதமாகும்.மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல் கேட்டு நடப்பது அவசியம். தேவையற்ற நட்பில் இருந்து விலகிருங்கள். கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: குருவாயூரில் உள்ள குருவாயூரப்பனை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


