search-icon-img
featured-img

விருச்சிகம்

Published :

(விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை)

தடைகளை தகர்த்தெறியும் விருச்சிக ராசி அன்பர்களே, சனிபகவான் உங்கள் ராசிக்கு 5ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் சரியாகும்.இருப்பினும் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிலும் முடிவெடுக்க திணறக்கூடிய சூழல் உருவாகும். 26-5-2026க்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் நீங்கும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு.ராகு கேது பகவானின் சஞ்சாரத்தால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. தாயுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உறவுகளால் மனக்கசப்புகள் உண்டு. வீடு வாகனம் சொத்து செலவினங்கள் உண்டு. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் முயற்சிகள் கைக்கூடும். மக்களிடையே உங்கள் நிறுவனம் பிரபலம் அடையும். உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உயர் அதிகாரிகள் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வந்து சேரும். தொழில் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு இடம் மாற்றம் ஏற்படலாம். மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஆதரவு கிடைக்கும். நல்ல மதிப்பெண் எடுத்து உயர்கல்வியில் வெற்றி பெறலாம். மற்றவர்களால் பாராட்டப்படுவர். கலைத்துறையினருக்கு உங்களுடைய தற்போதைய வாய்ப்புகளால் பிரபலம் அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.

பரிகாரம்: சிறுவாபுரியில் உள்ள முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.