search-icon-img
featured-img

ரிஷபம்

Published :

(கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2, 3 ம் பாதம்)

பொறுமையே பெருமை தரும் என்பதை உணர்ந்து செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே, சனிபகவான் உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரித்து உங்கள் ராசியை பார்ப்பதால் எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஈடேறும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பொருளாதாரத்தில் நிறைவு பெறுவீர்கள்.26-5-2026 க்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு 3ல் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லது. எதிர்காலம் பற்றிய பயம் சுய சந்தேகம் வந்து நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். 5-12-2026 வரை ராகு கேது பகவான் முறையே உங்கள் ராசிக்கு 10, 4ல் தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் தனித் திறனை வெளிப்படுத்தி முன்னேறுவீர்கள். மற்றவர்களால் பாராட்டப்பட கூடிய சூழல் உருவாகும். தாய் உடல் நலனில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் மற்றும் சொத்து தொடர்பான பிரச்னைகள் உருவாகும்.ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள். ஆசிரியர்களால் பாராட்டப்படுவார்கள்.கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.