(உத்திரம் 2,3,4 ம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)
சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தன்னை எளிதில் மாற்றிக் கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே, சனிபகவான் உங்கள் ராசிக்கு 7 ல் கண்டகச் சனியாக சஞ்சரிப்பதால் கவனம் தேவை.உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். உறவினர் மற்றும் நண்பர்களை முழுமையாக நம்ப வேண்டாம். அவர்களை கவனமாக கையாளுங்கள்.26-5-2026 க்கு பிறகு குரு பகவான் உங்கள் 11 ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பொருளாதார நிலையில் மிகப்பெரிய உயர்வு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. கண்டகச் சனியின் தாக்கம் குறையும்.ராகு கேது பகவானின் சஞ்சாரத்தால் வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். வங்கி கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். எதிலும் வெற்றி உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். நீண்ட நாளாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் முயற்சிகள் கைக்கூடும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கவனமாக கையாளுங்கள். உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உயர் அதிகாரிகள் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இருந்தாலும் அளவுக்கு மீறி எதிலும் செயல்பட வேண்டாம்.மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஆதரவு கிடைக்கும். நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். கலைத்துறையினருக்கு உங்களுடைய தற்போதைய வாய்ப்புகளால் பிரபலம் அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். இருப்பினும் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
பரிகாரம்: ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ண பகவானை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


