மகரம்
அக்டோபர் 17 முதல் 23 வரைராசிநாதன் சனிபகவான் உச்சம் பெற்று தசஸ்தானத்தில் உள்ளார். அவசியமற்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். உங்களின் ராசிக்கு 1, 2க்குடையவர் சனிபகவான் ஆவதால் நல்லதிற்கு நன்மையும், தவறுக்கு தண்டனையும் தருவார். 9ல் சுக்கிரன் நீசம் அடைகிறார். பூர்வ புண்ணிய சொத்து பாதிப்பு வரும். நண்பர்கள் மூலம் விரயம் அதிகரிக்கும். உடல்நலம், மனநலம் ஆரோக்கியம் காணும். தந்தையின் தொழில் உத்யோகம் பாதிக்கும். இடமாற்றம் செய்து கொள்வது நல்லது. 7ல் குருபகவான் தன நெருக்கடியை தருவார். தாயின் உடல்நலம் பாதிக்கலாம். பலமுறை முயற்சி செய்யவும். காரியம் வெற்றியாகும். அரசாங்க வழி ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வளர்ச்சி குறையும். லாபம் தடைபடும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். இடமாற்றம், தொழில் மாற்றம் அமையும். விவசாயிகளுக்கு மகசூல் குறையும். கலைஞர்களின் போராட்டம் முடிவு பெறும். எதிர்பார்ப்பு வெற்றி தரும். கனவு மெய்ப்படும். நடிகர்கள், ஒளிப்பதிவாளர் புகழ்பெறுவர். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பொறுமையுடன் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழுங்கள்.
சந்திராஷ்டமம்: 18ம் தேதி மாலை முதல் 21 காலை வரை இருப்பதால் புதிய முயற்சி தவிர்க்கவும்.
பரிகாரம்: தினமும் சக்கரத்தாழ்வாருக்கு ஏலக்காய் மாலை சார்த்தவும்.