கும்பம்
அக்டோபர் 17 முதல் 23 வரைராசிநாதன் சனிபகவான் உச்சம் பெற்றுள்ளார். 7க்குடைய சூரியன் நீசம் பெற்று உடன் இருக்கிறார். தாய், தந்தையரின் உடல்நலம், மனநலம் குழப்பம் காணும். 5, 8க்குடைய புதன் ஆட்சி பெற்று அஷ்டம ஸ்தானத்தில் உள்ளார். பூர்வீக சொத்து வழி யோகம் கிட்டும். குருபகவான் உச்சம் பெறுவதால் கடின முயற்சியால் மட்டுமே காரியம் வெற்றியாகும். எதையும் அவசரம் தவிர்த்து யோசித்து நடக்கவும். சகோதரர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். நண்பர்கள் மூலம் சகாயம் பெறுவீர்கள். 11ல் செவ்வாய். பொருளாதாரம் மேம்படும். 2ல் உள்ள கேதுவால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பம் வரும். தடைபட்ட தொழில் உத்யோகம் வளர்ச்சி காணும். தனலாபம் கிட்டும். குழந்தைகளின் கல்வி, உத்யோகம் உயர்வடையும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிட்டும். தொழிலில் அதிபர்களின் வளர்ச்சி குறையும். சில மாற்றங்களை செய்து கொள்வது நல்லது. வியாபாரிகளுக்கு லாபம் குறையும். கூட்டுத்தொழில் மூலம் ஆதாயம் கிட்டும். இரும்பு கட்டிட தொழில், நூல், ஜவுளி தொழில் கூடுதல் லாபம் காண்பீர்கள். கலைஞர்களின் உழைப்புக்குரிய அந்தஸ்தும் தனலாபமும் கிட்டும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தனது பணியில் மட்டும் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம்: 21 காலை முதல் 23 மாலை வரை இருப்பதால் ஜாமீன் கையெழுத்து தவிர்க்கவும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை சார்த்தி வழிபட்டு வரவும்.