மீனம்
அக்டோபர் 17 முதல் 23 வரைஜன்மராசியில் கேதுபகவானும் 7ல் சுக்கிரன் நீசம் பெற்று ராகுவுடனும் சேர்ந்துள்ளார். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு வரும். விரயம் அதிகரிக்கும். பிரயாணம் அதிகரிக்கும். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தாங்கள் உருவாக்கிக்கொள்வது மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் நல்லாதரவு கிட்டும். சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு வரும். இடம், மனை, வழி பாதிப்பு வரும். சட்டச்சிக்கல் வரலாம். அஷ்டம சனியின் காலமாக இருப்பதால் மருத்துவச் செலவு வரும். தந்தையின் தொழில், உத்யோகம் பாதிப்படையும். பெண்கள் மூலம் அவப்பெயர் வரலாம். குழந்தைகளின் கல்வி உத்யோகம் உயர்வு காணும். உயர்படிப்பு அமையும். சிலருக்கு அரசாங்கத்தில் உயர் பதவியில் வேலை வாய்ப்பு அமையும். தொழில் அதிபர்கள் முனைப்புடன் செயல்படுவீர்கள். காரியம் வெற்றியாகும். வங்கிகள் மூலம் நிலை சரியாகும். வியாபாரிகளின் லாபம் உயர்வு காணும். ஆபரணம், உணவுப்பொருள், ஜவுளி தொழிலில் கூடுதல் லாபம் கிட்டும். கலைஞர்களின் கனவு நிறைவேறும். தடைபட்ட காரியம் ஜெயமாகும். தனலாபம் கிட்டும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பின்னடைவை சந்திப்பீர்கள். முன்பு செய்ததற்கு தற்பொழுது பாதிப்பு அடைவீர்கள். எதிலும் பொறுமை அவசியம்.
பரிகாரம்: தினமும் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வரவும்.