ரிஷபம்
அக்டோபர் 17 முதல் 23 வரைராசிநாதன் சுக்கிரன் 5ல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ளார். ராசிநாதன் நீசம் அடைவது அவ்வளவு சிறப்பல்ல. உடல்நிலையில் அதிக கவனம் தேவை. பொருள் விரயம் அதிகரிக்கும். தாயின் உடல்நலம் மருத்துவச் செலவு தரும். தாய்வழி வர்க்கம் மூலம் நல்லாதரவு பெறுவீர்கள். 8ல் உள்ள செவ்வாய் சகோதரர்களிடம் மன பேதம் உண்டாக்குவார். இடம், மனை வழி பாகப்பிரிவினை வரலாம். 11ல் உள்ள கேதுவும், 6ல் உள்ள சனியும் உங்களின் தேவையை சரியாக உணர்ந்து வாரி வழங்குவார். தந்தையின் தொழில், உத்யோகம் வளம் பெறும். ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி, உத்யோகம் மந்தம் காணும். வீண் செலவு அதிகரிக்கும். தொழில் அதிபர்களின் வளர்ச்சி குறையும். கூடுதல் முதலீடு செய்து வளர்ச்சி காணலாம். அதற்காக புதிய கடன்படுவீர்கள். நண்பர்களால் நல்லாதரவு கிட்டும். வியாபாரிகளின் லாபம் குறையும். வாடிக்கையாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது. கலைஞர்களின் எதிர்பார்ப்பு ஈடேறும். எதிர்பார்த்த செயல் பூர்த்தியாகும். முதலீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், இசை துறையினர் புகழ், தனலாபம் அடைவார்கள். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் அமைதி காப்பது நல்லது.
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை சார்த்தி வழிபட்டு வரவும்.