மிதுனம்
அக்டோபர் 17 முதல் 23 வரைராசிநாதன் புதன் கன்னியில் உச்சம், ஆட்சி பெற்றுள்ளார். உடன் சுக்கிரன், ராகு உள்ளனர். பூர்வீக புண்ணிய பாக்கியத்தில் பாதிப்பும், பொருள் விரயமும் இருக்கும். 2ல் குருபகவான் உச்சம் பெறுவதால் பொருளாதாரம் மேம்படும். குழந்தைச் செல்வங்கள் கிட்டும். தந்தையின் தொழில் உத்யோகம் உயர்வடையும். 5ல் உள்ள சனிபகவானால் குடும்பத்தில் அவசியமற்ற பேச்சும், வீண் குழப்பமும் வரும். 10ல் உள்ள கேதுபகவான் உடல் உபாதையை தருவார். நண்பர்களால் நல்லாதரவு கிட்டும். தொழில் வளர்ச்சி காண்பீர்கள். தந்தையின் வர்க்கம் மூலம் நல்லாதரவு பெறுவீர்கள். குழந்தைகளின் கல்வி, உத்யோகம் முன்னேற்றம் காணும். சிலருக்கு அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு கிட்டும். தொழில் அதிபர்கள் முனைப்புடன் செயல்படுங்கள். அரசாங்கம் வழி ஆதரவு பெறுவீர்கள். கூடுதல் வளர்ச்சி அடைவீர்கள். வியாபாரிகளின் லாபம் உயர்வு காணும். வாடிக்கையாளர்களின் வரவு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு மகசூல் கூடும். கால்நடை யோகம் உண்டு. கலைஞர்களின் நிலை உயரும். பாடல், இசை, எழுத்தாளர்கள் வளம் காண்பர். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு இழந்த கவுரவம் மீண்டும் கிட்டும். பகை உணர்வு தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: தினமும் தட்சிணாமூர்த்திக்கு முல்லைப் பூ சார்த்தி வழிபட்டு வரவும்.