மேஷம்
26.1.2020 முதல் 1.2.2020 வரை
எடுத்த காரியங்களில் வெற்றி உண்டு. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் எதிர்பாராத உதவிகளின் மூலம் நடந்தேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் நிலையை பொருத்தவரை பெரிய உபாதைகள் ஏதும் இருக்காது என்றாலும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண முயற்சிகள் குறித்து செய்யும் முயற்சிகள் பலன் தரும் நேரம் இது என்பதால் முழு முயற்சியுடன் முயற்சிக்கவும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பிள்ளகைளால் பெரும் சேரும். மாணவர்களை பொருத்தவரை கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினால் எதிர்பாா–்த்தது நடந்தேறும். வாழ்ககை தரம் உயரும். எதிர்பார்த்த தனவரவு திருப்தியளிக்கும். மகிழ்ச்சி கூடும். புதிய முதலீடுகள் குறித்து திட்டமிட ஏற்ற சமயம். நன்மையான பலன்களே அதிகம் இருப்பதால் நேரத்தை பயன்படுத்திக்கொண்டு வெற்றிகளை குவித்துக்கொள்ளுங்கள்.
வழிபாடு: ராகுகால துர்க்கைவழிபாடு தடைகளை தகர்த்து முன்னேறிச்செல்ல உதவும்.