மகரம்
26.1.2020 முதல் 1.2.2020 வரைவெளியூர் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் அலைச்சல் அதிகம் இருக்கும். அதேசமயம் உழைப்பிற்கேற்ற பலனும் இருக்கும். புதிய முயற்சிகளில் இறங்குவதா வேண்டாமா என்ற குழப்பம் தொடரும். பழைய கடன்கள் அடைபடும். வாகன சேர்க்கை உண்டு. வீட்டு பரமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு தடங்கலில்லாமல் நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. கேட்டநேரத்தில் உதவிகள் கிடைக்கும். ஒருசிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். நரம்பு மற்றும் கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம் என்பதால் உடல்நிலையில் கவனம் தேவை.
வழிபாடு: ஸ்ரீதத்தாத்ரேயரை வணங்கி, ஏழைகளுக்கு உணவு அளிப்பது நன்மைகளை அள்ளிதரும்.