கும்பம்
26.1.2020 முதல் 1.2.2020 வரைஅதிர்ஷ்டமான காலகட்டம். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. எதிர்பார்த்த இடங்களிலிருந்து மட்டுமில்லாமல் எதிர்பார்க்காத இடங்களிலிருந்தும் உதவிகள் தேடிவரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சில சுயநல நண்பர்களால் பொருட்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. கொடுக்கல் வாங்கலில் சங்கடங்கள் ஏற்படகூடும் என்பதால் முற்றிலும் தவிர்க்கவும். குழப்பமான விஷயங்களில் விலகி இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்க நீங்களே முயற்ச்சிக்க வேண்டும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. உடல் நலனில் பெரிய பாதிப்புகள் இருக்காது என்றாலும் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.
வழிபாடு: பிரத்யங்கிரா தேவியை வழிபட்டு வர பிரச்சனைகள் வராது தவிர்த்துகொள்ளலாம்.