மீனம்
26.1.2020 முதல் 1.2.2020 வரைஅரசாங்கத்தால் நன்மை உண்டு. சொந்த வீடு வாங்க எடுக்கும் முயற்ச்சிகள் பலனலிக்கும். வாழ்க்கைதுணை மற்றும் குழந்தைகளால் குடும்பத்தில் குதூகலம் இருக்கும். தேவையான பொருளை வாங்குவீர்கள். தனவரவில் திருப்தி இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மேலதிகாரி, உடன் பணியாற்றுவோரால் பாராட்டப்படுவீர்கள். தேவையற்ற மன சஞ்சலம் இருக்கும். பயணங்களின் போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். குழந்தைகளின் படிப்பில் தனிகவனம் செலுத்தவும். தொடர்ந்து எடுத்துவரும் மருந்துகளை தவறாமல் எடுக்க வேண்டும். அஜாக்கிரதையாக இருந்தால் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். புத்திர பாக்யம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
வழிபாடு: ஸ்ரீகிருஷ்ணனை வழிபட்டு வர சந்தோஷம் நீடித்து இருக்கும்.