ரிஷபம்
26.1.2020 முதல் 1.2.2020 வரைஏற்ற இறக்கங்கள் இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. காய்ச்சல் பித்த சம்பந்தமான நோய்களுக்கான அறிகுறிகள் தென்படும். மருத்துவ செலவுகள் உண்டு. உரிய மருத்துவ ஆலோசனைகளை தவறாமல் எடுத்துக்கொள்வது நல்லது. வாகன பயணத்தின் போது கூடுதல் கனத்துடன் செயல்பட வேண்டும். எடுக்கும் காரியங்களில் பெரும்பாலும் சாதகமான பலன்களை இருக்கும் சூழல் உள்ளது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் முயற்சியால் காரிய வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். குழந்தைகள் வழியில் சந்தோஷமான செய்திகள் மனதிற்கு ஆறுதலாய் இருக்கும். தனவரவு சுமாராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய ஆதாயம் இல்லையென்றாலும் நஷ்டம் ஆகாது. மாணவர்கள் கூடுதல் எழுத்து பயிற்சியில் ஈடுபட்டால் கல்வியில் ஏற்றம் இருக்கும்.
வழிபாடு: சிவபெருமான் வழிபாடு உடல் நலனில் முன்னேற்றத்தை கொடுக்கும்.