மிதுனம்
26.1.2020 முதல் 1.2.2020 வரைதொழிலில் இடமாற்றம் ஏற்படலாம். எதிரிகளிடம் எச்சரிக்கை தேவை. எடுதத செயல்களில் வெற்றி கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். வாகனங்கள் இயக்கும் பொழுது கவனம் தேவை. எதிலும் அரசு விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும். தேவையற்ற செலவுகளை கட்டுபடுத்தவும். புதிய ஆடைகள் வாங்குவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். தடைபட்ட விவாக முயற்சியில் நல்ல மாற்றம் ஏற்படும். சிலருக்கு விவாஹம் நிச்சயமாகும். கணவன் மனைவிக்குள் அன்னியோயம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் உடல் நலனில் கவனம் தேவை. தன வரவு திருப்தி தரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். வயிறு, கால்களில் வலி ஏற்படலாம். தகுந்த ஓய்வு உடல் நலம் சீராக இருக்க உதவும். உறவினர்கள், நண்பர்களால் உதவி கிடைக்கும். பொறுமையை கையாண்டால் வெற்றி உண்டு.
வழிபாடு: ஸ்ரீராமசந்த்ரமூர்த்தியை வழிபடுவதும் ராம நாம ஜெபம் சொல்வதும் மன அமைதி தரும்.