கடகம்
26.1.2020 முதல் 1.2.2020 வரைநீண்ட நாள் ஆசைகள் கைகூடும். வெளிநாட்டு செய்திகளால் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளை களைய விட்டுகொடுத்து செல்வது அவசியம். பிள்ளைகள் வழியில் செலவுகள் உண்டு. வயறு மூச்சுக்குழல் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்புகளை தவிர்க்க உடல்நிலையில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும் போது கவனம் தேவை. சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளுதல் மருத்துவ செலவுகளை குறைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கடன் வாங்காமல் எச்சரிக்கையுடன் இருப்பது நலம். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பிரச்னையான நேரத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். முக்கிய முடிவுகள் எடுப்பதை சற்று தள்ளிபோடுவது நன்மை பயக்கும்.
வழிபாடு: ஸ்ரீசுதர்ஸன வழிபாடு மனதைரியத்தையும் தெளிவையும் கொடுக்கும்.