கன்னி
26.1.2020 முதல் 1.2.2020 வரைதனலாபம் உண்டு. தொல்லை கொடுத்து வந்த நோய் விலகும். தன வரவு கூடும். உடன் பிறந்தவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. பூர்வீக சொத்துகள் வழியில் இருந்த தடைகள் விலகும். விவாக காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்டு வந்த தெய்வ வழிபாடு நடந்தேரும். மாணவர்களை பொருத்தவரை மேற்படிப்பு படிப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தேவையில்லாத செலவுகளில் நாட்டம் கூடும். இந்த விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையாக இருந்தால் சேமிக்கலாம். குளிர், நரம்பு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம் என்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் ஆதாயம் உண்டு. எதையும் சிந்தித்து செயல்படுத்துவது நன்மை பயக்கும்.
வழிபாடு: விநாயகபெருமானை வணங்கி அருகம்புல் சாற்றிவர சங்கடங்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.