விருச்சிகம்
26.1.2020 முதல் 1.2.2020 வரை
புதிய நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். மதிப்பு, கவுரவம் கூடும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாரட்டப்படுவீர்கள். தீய நட்புக்கள் தாமாக விலகிவிடும். மருத்துவ செலவுகளால் ஏற்படும் மனசஞ்சலத்தை களைய உடல் நலனில் கவனம் வேண்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்தவும். தன சேர்க்கை இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். புதிய முதலீடுகள் செய்ய அந்தந்த துறை அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெறுவது அவசியம். கணவன் மனைவியிடையே சிறு பிணக்குகள் தோன்றலாம். குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நேரம் சாதகமாக உள்ளது. புதிய வாகனம், புதிய பொருட்கள் சேர்க்கை உண்டு. மன மகிழ்ச்சி இருக்கும்.
வழிபாடு: ஸ்ரீமுருகப்பெருமானை வணங்கி, ஸ்லோகங்களை தினமும் சொல்லிவர மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.